கனடா செய்திகள்
கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு அரியவகை மம்மிகள்
09/14/2018கனடா மலைப்பகுதியில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இரண்டு அரியவகை விலங்குகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யூகோன் என்ற மலைப்பகுதி அமைத்துள்ளது.
இந்த மலைப்பகுதிக்கு அருகில் அமைத்துள்ள டைவுசன் நகரத்தில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கலைமான் ஒன்றினதும் ஓநாய்க் குட்டியொன்றினதுமான இரு விலங்குகளின் அரியவகை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அரியவகை மம்மிகளையும் இரண்டையும் அங்கு பணிபுரியும் தங்கச் சுரங்க பணியாளர்கள், கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, கண்டுபிக்கப்பட்ட அரியவகை மம்மிகளின் தோல், மயிர், தசைகள் ஆகிய அனைத்தும் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்..