கனடா செய்திகள்
செயற்கை, நிறை செறிவூட்டப்படாத கொழுப்பிற்கு கனடா தடை விதிக்கின்றது.
09/16/2018கனடாவின் ஊட்டச்சத்து கொள்கை அடிப்படையில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.
நிறை செறிவூட்டப்படாத கொழுப்பு அதிகார பூர்வமாக கனடாவின் உணவு விநியோகத்தில் திங்கள் கிழமை முதல் தடை செய்யப படுகின்றது.
கிட்டத்தட்ட 15வருடங்களின் பின்னர் பாராளுமன்று உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்த எண்ணை, அடுக்கு தட்டுகளில் நீண்ட காலம் பொதிசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதற்காகவும், இனிய மாப்பண்டங்கள்-pastries பேக் செய்யப்படும் பொருட்களிற்காகவும் உபயோகப் படுத்தப்படுகின்றது. ஆனால் இவை அடர்த்தி குறைந்த கொழுப்பு புரதத்தின் (LDL), அல்லது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்வதுடன் நல்ல கொழுப்பின் (HDL), அளவையும் குறைக்கின்றன.
கனடாவின் ஊட்டச்சத்து அடிப்படையில் மிக முக்கியமான மைல் கல்லாகும் என ஹார்ட் மற்றும் ஸ்ரோக் அறக்கட்டளை சுகாதார கொள்கை மற்றும் ஆலோசனை இயக்குநர் மனுவெல் அரங்கோ தெரிவித்தார். கனடாவில் முற்றிலுமாக தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வாரம் தடை அமுலிற்கு வரும் போது உபயோகிப்பது சட்டவிரோதம் என கருதப்படும் என அறியப்படுகின்றது.
கனடாவில் விற்பனைக்கு இருக்கும் பொருட்களிற்கு மட்டுமன்றி இறக்குமதி செய்யும் பொருட்களிற்கும் தடை விதிக்கப்படும். டிரான்ஸ் கொழுப்பு உபயோகிக்கும் பொருட்களில் சில-இனிய மாப்பண்டங்கள்-pastries, french fries, டோனட்ஸ் மற்றும் பொப்கோன் ஆகிய உணவுகளில் பொதுவாக மாறு பக்க கொழுப்பு உபயோகிப்பதால் எதிர்க்க கடினமானதாக இருக்கும்.
இதனால் இதய துடிப்பு தடைசெய்யப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதனை தடை செய்வதினால் 20-வருட காலப் பகுதியில் கனடாவில் 12,000 மாரடைப்புகளை தடுக்கலாம் என ஆய்வு காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.