கனடா செய்திகள்
கனடாவில் இன்று முதல் வருகிறது புதிய தடை
09/18/2018கனடாவில் இன்று முதல் நிறை செறிவூட்டப்படாத கொழுப்பிற்கு உத்தியோகப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்று உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கனடாவின் ஊட்டச்சத்து அடிப்படையில் இது மிக முக்கியமான மைல் கல்லாகும் என ஹார்ட் மற்றும் ஸ்ரோக் அறக்கட்டளை சுகாதார கொள்கை மற்றும் ஆலோசனை இயக்குநர் மனுவெல் அரங்கோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் விற்பனைக்கு இருக்கும் பொருட்களிற்கு மட்டுமன்றி இறக்குமதி செய்யும் பொருட்களிற்கும் தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
டிரான்ஸ் கொழுப்பு உபயோகிக்கும் பொருட்களில் சில-இனிய மாப்பண்டங்கள்-pastries, french fries, டோனட்ஸ் மற்றும் பொப்கோன் ஆகிய உணவுகளில் பொதுவாக மாறு பக்க கொழுப்பு உபயோகிப்பதால் எதிர்க்க கடினமானதாக இருக்கும். இதனால் இதய துடிப்பு தடைசெய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தடை செய்வதால் 20 வருட காலப் பகுதியில் கனடாவில் 12,000 மாரடைப்புகளை தடுக்கலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.