கனடா செய்திகள்
கனடாவில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்
08/03/2019கனடாவின் லாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 மாத குழந்தை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
RCMP தகவலின் படி, குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை வேளையில் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி மூன்று மணி நேர போராடத்திற்கு பிறகு குறித்த குழந்தை மீட்கப்பட்டது.
மேலும், இது தொடர்பில் ஹாலிஃபேக்ஸ் பொலிஸார் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம், ஒட்டாவாவிலிருந்து வடக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபெர்ம்-நியூவ்,லாரன்டியன்ஸில் ஆற்றில் சம்பவித்துள்ளது.