New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் காரை உடைத்து கத்தி குத்து தாக்குதல் - தந்தை உயிரிழப்பு மகன் மருத்துவமனையில்

08/03/2019

கனடாவில் காரை உடைத்து மர்ம இளைஞர்கள் நடத்திய கத்தி குத்து தாக்குதல், சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மகன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம், நேற்று அதிகாலை 2:20 மணியளவில் காஸில்மோர் மற்றும் கோர்வே டிரைவ் பகுதியில் உள்ள லேன் ப்ரூக் டிரைவில் நிகழ்ந்தது.

இதில், உயிரிழந்த குறித்த நபர் 63-வயது நிறைந்த (க்ளென்ஸ்பர்ட் ஆலிவர்) Glensbert Oliver என்று பொலிஸாரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இதில், அவருடைய மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.