கனடா செய்திகள்
சீனா இழந்த இடத்தை மெக்சிக்கோவும், கனடாவும் பிடித்தது என்ன காரணம் தெரியுமா
08/03/2019வர்த்தகப் போரின் விளைவாக, அமெரிக்காவின் முன்னணி வர்த்தக கூட்டாளி என்ற நிலையை சீனா இழந்துள்ளது. மெக்சிக்கோவும், கனடாவும் அந்த இடத்தைப் பிடித்துள்ளன.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரின் விளைவாக, அமெரிக்காவிற்கு சீன ஏற்றுமதி 12 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல, சீனாவுக்கு அமெரிக்க ஏற்றுமதி 19 சதவீதம் சரிந்துள்ளது.
டிரம்ப் அதிபரான பின்னர், சீன இறக்குமதிகளில் 250 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் மீது ஏற்கெனவே அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது.
மேலும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் மீது நேற்று 10 சதவீத வரி அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக, 2015ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் முன்னணி வர்த்தக கூட்டாளியாக இருந்த சீனா, தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் பாதியில், அமெரிக்காவின் முன்னணி வர்த்தகக் கூட்டாளி என்ற இடத்தை மெக்சிக்கோவும், இரண்டாமிடத்தை கனடாவும் பிடித்துள்ளதாக, தி வால்ஸ்டிரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிக்கை தெரிவித்துள்ளது.