கனடா செய்திகள்
ஹ்வாவெய் நிறுவன சாதனங்கள் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரும்
08/05/2019சொந்த இயங்குதளத்துடன் கூடிய ஹ்வாவெய் நிறுவன சாதனங்கள் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரால் கடந்த மே மாதம் முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஹ்வாவெய்-ஐ பாதித்துள்ளது.
சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான ஹ்வாவெயை அமெரிக்கா கருப்பு பட்டியலில் இட்டது.
இதையடுத்து, அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துடைய ஆன்ட்ராய்ட்-ன் மேம்படுத்தப்பட்ட சேவைகள் ஹ்வாவெய் சாதனங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
விதிகள் தளர்த்தப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையிலும் அதில் குழப்பங்களும், நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது. இந்நிலையில், ஹாங்மெங் ((Hongmeng)) என்ற சொந்த இயங்குதளத்தை ஹ்வாவெய் வடிவமைத்து சோதித்து பார்ப்பதாக அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டன.
அந்த ஹாங்மெங் இயங்குதளத்துடன் கூடிய சாதனங்கள் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரக்கூடும் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.