New year offer 2017

கனடா செய்திகள்

ஒன்ராறியோவில் விமான விபத்து ஒருவர் பலி ஆறுபேர் காயம்

08/09/2019

மத்திய ஒன்ராறியோ – முஸ்கோகா பகுதியில் நீர் மிதப்பு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 6பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கனேடிய விமானப்படை தெரிவித்துள்ளது

கடந்த திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மேல் ராஃப்ட் ஏரி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேவேளை, மேலும் இருவர் உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பரசூட் மூலம் சம்பவ இடத்தில் தரையிறங்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் மீட்கப்பட்ட 6 பேரும் சிகிச்சைகளுக்காக முஸ்கோகா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மீட்பு நடவடிக்கைக்காக விமானப்படை உலங்குவானூர்தி ஒன்றும் விமானம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டதாகவும் விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.