New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் பள்ளி மாணவர்களிடையே கைகலப்பில் மன நலம் பாதிப்படைந்த சிறுவன்-நீதிமன்றத்தில் கிடைத்த தண்டனை

08/15/2019

கனடாவில் பள்ளி மாணவர்களிடையே கைகலப்பில் மன நலம் பாதிப்படைந்த சிறுவன் தொடர்பில் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான, சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற நிலையில் இதில் தொடர்புடைய மூவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில், 14 வயதுடைய (Jayden Trudell) என்ற சிறுவன் பாதிப்படைந்த நிலையில் அவர் தீவிர சிகிக்சையில் மருத்துவமனையில் உள்ளார்.

மருத்துவமனையில் ( Trudell) இருந்த புகைப்படத்தினை அவரது தயார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் 18-வயதிற்குட்பட்ட மூன்று சிறுவர்கள் குறித்த தாக்குதல் குற்றச்சாட்டினை எதிர் கொள்கின்றனர்.

இதில், குறித்த சிறுவர்களுக்கு 7-மாத நீதிமன்ற காவலில் வைத்து வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறும்.