கனடா செய்திகள்
கனடாவில் முதலாவது கொடூர கொலை வழக்கில் சிக்கிய 18 வயது வாலிபர்
08/15/2019கனடாவில், நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் முதலாவது கொடூர கொலை வழக்கில் 18-வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம், கனடாவின் 105 அவென்யூ மற்றும் 98 தெருவில் கடந்த வாரம் சுமார் 2:30 மணிக்கு சம்பவித்துள்ளது.
இது தொடர்பில், தீவிர விசாரணை நடத்தி வந்த பொலிஸார் 18வயதுடைய (Jesse Beckles), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, குறித்த நபர் முதலாவது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்கிறார். மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக RCMP at 780-926-2226 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் குறித்த நபர் வரும் ஆகஸ்ட் 26, அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்.