கனடா செய்திகள்
கனடாவில் மாயமான 4 வயது சிறுவனின் தற்போதைய நிலை என்ன
08/18/2019கனடாவில் மயமான 4-வயது சிறுவன் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தகவல் தெரிவித்துள்ள பொலிஸார் உதவி புரிந்த பொது மக்கள் மற்றும் இணைய வாசிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தையினை RCMP பொலிஸார் விமானம் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, RCMP பொலிஸார் கடந்த 17 ஆம் தேதி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்
(Tamara Wiese) என்ற 4- வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரின் புகைப்படத்துடன் பதிவிட்டனர்.
குறித்த சிறுமி அணிந்திருந்த உடையின் நிறம், அவர் தலைமுடியின் நிறம் குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை, சிறுவனை குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அது குறித்து தெரிவிக்கலாம் என ஒரு தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் வெளியிட்டனர்.
இந்நிலையில், முகநூல் பதிவில் பதிவிட்டிருந்த தகவலின் படி சமூகவலைத்தள வாசிகள் மற்றும் RCMP பொலிஸார் மற்றும் விமானம் உதவியுடன் குறித்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.