New year offer 2017

கனடா செய்திகள்

சீனாவுடனான இராஜ தந்திர மோதலை அதிகரிக்கும் நோக்கம் இல்லை கனடா பிரதமர் தகவல்

08/23/2019

மோதலை அதிகரிக்கும் நோக்கம் இல்லை, சீனாவுடனான வர்த்தக மற்றும் இராஜதந்திர மோதலை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் நலன்களை பேணும் நடவடிக்கைகளின் இருந்து கனேடிய அரசு ஒதுபோதும் பின்வாங்காது எனவும் அவர் கூறினார். ஹொங்கொங் விடயத்தில் தலையீடு செய்வதை கனடா நிறுத்திக்கொள்ள வேண்டும் என கனடாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்தக் கருத்துக் குறித்து மொன்றியலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு கூறினார்.

இரு கனேடியப் பிரஜைகளை கைது செய்து சீனா தடுத்து வைத்துள்ளது. அத்துடன் கனோலா எண்ணெய் வித்துக்கள் மற்றும் விலங்குணவுகளை கனடாவில் இருந்து இறக்குமதி செய்வதையும் அந்நாடு நிறுத்தியுள்ளது.

சீனா தொழில்நுட்ப நிறுவனமான குவாவியின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் வான்கூவர் பொலிஸாரால் கடந்த டிசெம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச அளவில் அபரிமிதமான வளர்ச்சியை சீனா கொண்டுள்ளது. அதனை நாங்காள் அங்கீகரிக்கிறோம். ஆனால் தவறு செய்யாதீர்கள். நாங்கள் எப்போதும் கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் கனேடிய நலன்களுக்கே முன்னுரிமை அளிப்போம் எனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

சீனாவும் கனடாவும் நேரடியாகவும் வெற்றிகரமாகவும் பல விடயங்களைக் கையாண்ட நீண்ட வரலாறு உள்ளது. நாங்கள் சீனாவுடன் முரண்பட விரும்பவில்லை.

எனினும், எமது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப்போவதில்லை எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.