கனடா செய்திகள்
கனடாவில் பெண்ணிடம் முகம் சுழிக்கும் வேலையே செய்த நபருக்கு பொலிஸார் வலைவீச்சு
08/26/2019கனடாவின், பார்கெட்டவுன்டவுன் பகுதியில் ஒரே பெண்ணுக்கு, தொடர்ந்து இரண்டு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்போது குறித்த நபர் தொடர்பான சி.சி.டி.வி காணொளி பதிவொன்றினை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த நபர், யோங் மற்றும் ஜெரார்ட் வீதிகளில் உள்ள மெக்கில் பார்கெட்டில், 16 வயது சிறுமியொருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக குறித்த பெண்ணுக்கு, இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , இது தொடர்பில் தற்போது பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.