New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் 11 வது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் 17 வயது சிறுவன்

08/27/2019

கனடாவில், இந்த ஆண்டில் 11-வது கொலை குற்றச்சாட்டினை 17-வயது சிறுவன் ஒருவன் எதிர்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை 5:10 மணிக்கு ஃபேர்லைட் டிரைவின் 3800 தொகுதியில் இருந்து அழைப்பு வந்தது.

இதில், தாக்குதலுக்கு உள்ளான 22-வயது நபரை மீட்டு பொலிஸார் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, இது தொடர்பில் 17-வயது சிறுவனை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர். இதில், காயமுற்ற நபர் உயிரிழந்த நிலையில் குறித்த நபர் வரும் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.