கனடா செய்திகள்
கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்புடைய இருவரின் முக்கிய ஆதாரம்
08/27/2019கனடாவில் ஸ்டெட்லர் எரிவாயு நிலையத்திலிருந்து, திருடிய இரண்டு நபர்கள் தொடர்பில் முக்கிய ஆதாரத்தினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக RCMP பொலிஸார் அல்லது முக்கிய குற்றவியல் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான, முக்கிய ஆதாரம் அங்கிருந்த சி.சி.டிவி காணொளியின் மூலம் சிக்கியுள்ளது. இதில், குறித்த நபர் நீல நிற கார் ஒன்றில் புறப்பட்ட புகைப்படம் காட்டப்பட்டது.
குறித்த சம்பவம் ஆகஸ்ட் 20 அன்று சுமார் 3 மணியவில், கனடாவின் ஸ்டெட்லர் எரிவாயு நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.