கனடா செய்திகள்
Seine et Marne நகரில் பாரிய வெடிப்பு சம்பவம் 11 பேருக்கு நேர்ந்த விபரீதம்
08/29/2019சற்று முன்னர் Seine-et-Marne நகரில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் குறைந்தது பதினோரு பேர் காயமடைந்திருக்கலாம் என அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Samois-sur-Seine நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இரசாயன மருந்துக்கழிவுகள் மூலம் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு படையினர் மூலம் அறிய முடிகிறது.
உடனடியாக காயமடைந்த 11 பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபப்ட்டுள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறியமுடிகிறது. 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.