கனடா செய்திகள்
உதைபந்தாட்ட வீரர்கள் வீட்டில் கொள்ளை ஏழு நபர்கள் பரிசில் கைது
08/29/2019உதைபந்தாட்ட வீரர்கள் வீட்டில் கொள்ளையிட்ட வழக்கில் ஏழு நபர்கள் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிஸ் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். பரிசின் Saint Germain உதைபந்தாட்ட குழுவைச் சேர்ந்த இரண்டு வீரர்களின் வீட்டில் கடந்த டிசம்பர் (2018) மாதம் இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர். சில ஆயிரம் யூரோக்கள் ரொக்கப்பணத்தினை இவர்கள் திருடிக்கொண்டு சென்றிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 24-29 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. Paris, Seine-Saint-Denis மற்றும் Hauts-de-Seine ஆகிய நகரங்களில் வைத்து ஒரே நேரத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் Eric Maxim Choupo-Moting மற்றும் Thiago Silva ஆகிய வீரர்களின் வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டிருந்தது.