கனடா செய்திகள்
உலகின் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் இடம் பிடித்த ரொரன்ரோ
09/02/2019உலகின் பிரபல நகரங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்ட நிறுவனம் ஒன்று, உலகின் பாதுகாப்பான நகரங்களில் ரொரன்ரோ 6ஆவது இடத்தில் உள்ளதாகவும், வட அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நகரம் ரொரன்ரொ என்றும் தெரிவித்துள்ளது.
த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவு, உலகின் பிரபலமான 60 நகரங்களிடையே இந்த ஆய்வினை மேற்கொண்டு, இநத ஆண்டுக்கான பாதுகாப்பு குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் பாதுகாப்பு, உட்காட்டுமானம், சுகாதாரம் மற்றும் தனியாள் பாதுகாப்பு ஆகிய நான்கு காரணிகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், உலக அளவில் பாதுகாப்பான நகரங்களில் முதன் நிலையில் டோக்கியோவும், இரண்டாவது நிலையில் சிங்கப்பூரும், மூன்றாவது நிலையில் ஒசாகாவும், நான்காவது நிலையில் ஆம்ஸ்ரடாமும், ஐந்தாவது நிலையில் சிட்னியும், ஆறாவது நிலையில் ரொரன்ரோவும், ஏழாவது நிலையில் வோசிங்டனும பதிவாகியுள்ளன.
வட அமெரிக்க நகரங்களுள் முதல் பத்து இடங்களுக்குள் ரொரன்ரோவும், வாஷிங்டனும் மட்டுமே தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.