கனடா செய்திகள்
அமெரிக்கவை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம் பீதியில் உறைந்த மக்கள்
09/03/2019அமெரிக்காவின் மினசொட்டாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மினசொட்டா மாநிலத்தின் நிகழ்வொன்றில் பெருமளவு மக்கள் திரண்டிருந்த வேளை இந்த துப்பாக்கிபிரயோகம் இடம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட கண்காட்சியில் கலந்து கொண்டிருந்த யுவதியொருவர் வாகனமொன்றினால் மோதப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விபத்தின் பின்னர், விபத்திற்கு காரணமான வாகனச் சாரதி தனது வாகனத்தை நிறுத்தினார் எனினும் அங்கிருந்தவர்கள் அவரை தாக்கியதை தொடர்ந்து அவர் அங்கிருந்து விலகிச்சென்றார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சற்று தொலைவிற்கு சென்ற அவர் அங்கிருந்து பொலிஸார் அழைத்து விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருந்தவேளை பல துப்பாக்கிபிரயோகங்கள் இடம்பெற்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டபகுதிக்கு சென்று பார்த்தவேளை நபர் ஒருவர் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் காணப்பட்டார், அதன் பின்னர் மருத்துவமனைக்கு இருவர் காயங்களுடன் வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.