கனடா செய்திகள்
கனடாவில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்
09/05/2019கனடாவில் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மிசிசாகா மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குயின்ஸ்வே தெரு மற்றும் Hurontario street பகுதியில் குறித்த அந்த நபரை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டதாகவும், அவரைத் தாங்கள் முதலில் கண்ட வேளையில் அவர் தானாகவே அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாகவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர் எந்த இடத்தில் வைத்துச் சுடப்பட்டார் என்பதனைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.