கனடா செய்திகள்
இரண்டு வாலிபர்கள் மீது கனேடிய பொலிஸார் வழக்குப்பதிவு
09/06/2019கனடாவின், ஜெக்ஸ் பகுதியில் பொலிசாரின் வீதித் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பியோடிய இரண்டு 18வயது இளைஞர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Westney வீதிப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்ற வாகனம் ஒன்றை மறிக்க முயன்றதாகவும், எனினும் அது காவல்துறையினரை மதிக்காது அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகவும் டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பித்துச் சென்ற அந்த கறுப்பு நிற BMW வாகனத்தின் யன்னல் ஊடாக ஏதோ பொருள் வீசப்பட்டதனை அவதானித்து, அதனை ஆராய்ந்த போது அது கொக்கெய்ன் வகை போதைப் பொருள் என்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகனம் நகர்ந்து கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து அதன் சாரதியும் மேலும் ஒருவரும் இறங்கித் தப்பியோடிச் சென்றதாகவும், நகர்ந்து சென்ற வாகனம் கவிழந்து உருண்டு வீதியோர வேலியில் மோதி அருகே இருந்த காட்டினுள் வீழ்ந்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.