கனடா செய்திகள்
கனடாவில் பொலிஸார் தாக்குதலில் ஒருவர் இறந்தது தொடர்பான விசாரணை
09/13/2019மிசிசாகாவில் பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை ஒன்றாறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் பொறுப் பேற்றுள்ளனர்.
மோர்னிங் ஸ்டார் ட்ரைவ் மற்றும் போர்ரி ட்ரைவ் பகுதியில் குழப்பகரமான சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தினைச் சென்றடைந்த அதிகாரிகளுக்கும் அங்கிருந்த ஆண் ஒருவருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாகவும், அதன்போது அதிகாரிகள் ஒருவர், அந்த 34 வயதான ஆண் மீது மின் அதிர்ச்சி ஆயுதத்தினைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த ஆண், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ஒன்றாறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.