கனடா செய்திகள்
கனடாவில் இந்த ஒளிபடத்தில் இருப்பவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா
09/16/2019கனடாவில், யோர்க் பகுதியில் காணாமல் போன பெண் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த வாண்டா டபுக் எனப்படும் 47 வயதான பெண், எசெக்ஸ் அவென்யூ மற்றும் மேஜர் மெக்கன்சி டிரைவ் கிழக்கு பகுதியில் கடந்த பத்தாம் தேதி பிற்பல் 5:30 அளவில் மாயமாகியுள்ளார் என்று யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக குறித்த பெண், கறுப்பு மற்றும் வெள்ளை நிற கோடுபோட்ட மேற்சட்டையும், நீல காற்சட்டையும், கறுப்பு காலணியும் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பெண் கறுப்பு நிற கார் ஒன்றில் ஏறிச் சென்றதை அவதானித்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ள நிலையில், அது குறித்த பொலிஸார் மேலதிக விபரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், வாடகை வண்டிகள், விருந்தினர் தங்குமிடங்கள், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் போன்றவற்றில் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.