New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் இடிபாடுகளில் வசித்து வந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள் மீட்பு

09/19/2019

வடக்கு மனிடோபாவில் அநாதரவாக இருந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள், கல்கரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ரொக்கி மவுண்டன் மிருக மீட்பு இயக்குனர் ரோரி ஓ நீல்லின் உதவியுடன் குறித்த நாய் குட்டிகள், கொண்டு வரப்பட்டுள்ளன.

எந்த உணவும் தங்குமிடமும் இல்லாமல் சுற்றித் திரிந்து, இடிபாடுகளில் வசித்து வந்த நாய் குட்டிகளே, இவ்வாறு மீட்கப்பட்டதாக ரோரி ஓ நீல் தெரிவித்தார்.

அங்கு வசிக்கும் ஒரு பெண்மணியால் குறித்த நாய் குட்டிகள், கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறித்த நாய் குட்டிகளை வளர்க்க விரும்புவோருக்கு தத்துகொடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.