கனடா செய்திகள்
றொரண்டோ பகுதியில் நள்ளிரவில் அதி பயங்கர துப்பாக்கிச் சூடு
09/21/2019கனடாவின், ஈட்டன் சென்ரரில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்குப் பிறகு. ஒரு வாகனத்தில் வந்த சந்தேக நபர் ஈட்டன் சென்ரர் வடகிழக்கு மூலையை அணுகி H&M கடைக்கு அருகே பல முறை துப்பாக்கியால் சுட்டார் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு பல துப்பாக்கி ரவைகளும், கட்டிடத்தின் பக்கத்தில் பல புல்லட் துளைகளை கண்டுபிடித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அங்கு டஜன் கணக்கான மக்கள் நடைபாதையில் இருந்தனர், நல்ல நேரம் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்