New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் ஏராளமான கார்களில் மோதிய டம்ப் டிரக் பொலிஸார் விசாரணை

09/21/2019

கனடாவின், கலெடனில் டம்ப் டிரக் ஒன்று பல கார்களில் மோதிய பின் ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது

நேற்று முன்தினம் காலை கலேடனில் ஒரு டம்ப் டிரக் பல கார்கள் மோதிய பின் ஒரு கட்டிடத்தில் மோதியதை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டம்ப் டிரக் ஓட்டுநர் சிக்னலில் லைட் கம்பத்தை உடைத்துக் கொண்டு சிக்னலில் நின்ற கார் மீது மோதி தென்பகுதி சந்துகளுக்குச் சென்று, பல கார்களைத் தாக்கி, இறுதியில் அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மோதியுள்ளது

டம்ப் டிரக்கின் டிரைவர் தீயணைப்பு படையினரால் வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மற்ற வாகனங்களில் இருந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

பழைய கட்டிடம் என்பதால், டம்ப் டிரக் வெளியே எடுத்தல் கட்டிடம் உடைந்துவிடும்,டம்ப் டிரக் வெளியே எடுப்பதத்திற்கு பல கிரேன் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் மோதலுக்கு வடக்கே ஏற்பட்ட இரண்டாம் விபத்து குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை