கனடா செய்திகள்
குப்பைத் தொட்டியில் கிடந்தது மனித உடல் பாகமா கனேடிய பொலிஸார் விசாரணை
09/26/2019கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் குப்பைத் தொட்டியினுள் மனித உடல்பாகம் என நம்பப்படும் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம், ஹாரிசன் கார்டன் பவுல்வர்டு மற்றும் ஓக்பர்ன் கிரெசன்ட் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அங்குள்ள கட்டிடம் ஒன்றின் குப்பை சேகரிக்கும் பெட்டியினுள் இருந்து மனித உடற்பாகம் என நம்பப்படும் பொருள் ஒன்று வெளியே தெரிவதை அவதானித்த மேற்பார்வையாளர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வுகளையும் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், குறித்த அந்தப் பொருள் மனித உடற்பாகமா என்ற விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பில் மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ள போதிலும், அவர்கள் இன்னமும் விசாரணைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.