New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் றிவர்டேல் பகுதியில் அதி பயங்கர கத்திக்குத்து பதின்மவயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

09/27/2019

கனடாவின், றிவர்டேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த பதின்மவயது சிறுவன் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கத்திக் குத்துத் தாக்குதல், டென்போர்த் அவனியூ தெற்கே பேப் அவனியூ மற்றும் ஸ்ட்ராத்கோனா அவென்யூவில் நேற்று நடத்தப்பட்டது.

தாக்குதலுக்கு இலக்காகி உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரிவதாகவும் கூறப்படுகிறது.

எர்லி கிரே பாடசாலைக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்கும் பாடசாலைக்கும் தொடர்பு இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பிலான விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.