கனடா செய்திகள்
கனடாவில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்கு சிறை
09/27/2019கனடாவில்,சட்டவிரோத போதைப் பொருட்களை கியூபெக்கிற்குள் எடுத்துச் சென்றதாக குற்றறஞ்சாட்டப்பட்ட ஒன்ராறியோவை சேர்ந்த பெண் ஒருவருக்கு,சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 53 வயதுப் பெண், ஒன்ராறியோவின் வூட்லான்ட் பகுதியைச் சேர்ந்தவர். இவர், அதிகாரிகள் மற்றும் விசாரணையாளர்களை ஏமாற்றும் வகையில் சுமார் பத்து பொய் அடையாளங்களைப் பயன்படுத்தி, மொன்றியல் உள்ளிட்ட ஒட்டாவாவிற்கு சட்டவிரோத போதைப் பொருட்களை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இலத்திரனியல் உபரணம் ஒன்றினுள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட, போதை மாத்திரை தயாரிக்கப்பயன்படும் ஹெரோயின் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்களைக் கைப்பற்றிய ஜேர்மன் சுங்கத் துறையினர், அது குறித்த விசாரணைகளை அடுத்து கனேடிய மத்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த கனேடிய மத்திய பொலிஸார், ஆதரங்களுடன் குறித்த பெண்னை கைது செய்து வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, தற்போது அவருக்கு பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.