கனடா செய்திகள்
சாஸ்கடூனில் நான்கு பேர் மீது கொடூர தாக்குதல் கனேடிய பொலிஸ் தீவிர விசாரணை
09/27/2019கனடாவின் சாஸ்கடூனில் நான்கு பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸ் முக்கிய குற்றப் பிரிவு மற்றும் இலக்கு அமுலாக்கப் பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவென்யூ டி எஸ் இன் 100 தொகுதிகளில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு முன்னதாக, பொலிஸார் வர வழைக்கப்பட்டனர்.
இதன்போது, கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்த நான்கு பேரைக் கண்டுபிடித்து அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த சம்பவம் எதற்காக யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.