New year offer 2017

கனடா செய்திகள்

திருமணத்திற்கு தயாரான கனேடிய ஜோடிக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட துயரம்

09/29/2019

கனடாவின் புகழ்பெற்ற scuba diver ஒருவர் வெளி நாட்டில் விபத்தில் சிக்கி கடந்த இரண்டு மாதமாக உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்தின் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் அவரது மருத்துவ கட்டணம் மட்டும் இதுவரை 300,000 டொலர் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கனடாவின் Baysvilleபகுதியில், குடியிருந்து வருபவர் 56 வயதான கிம் மார்ட்டின். இவரே அயர்லாந்தில் விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் ஆகஸ்டு 8 ஆம் திகதி ஸ்கூபா டைவிங் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில், கிம் மார்ட்டின் படுகாயமடைந்து மார்புக்கு கீழே ஸ்தம்பித்த நிலையில், மீட்கப்பட்டுள்ளார். தற்போது, கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு துணையாக அவரது வருங்கால மனைவி கிர்ஸ்டின் சாட்விக் இருந்து வருகிறார்.