கனடா செய்திகள்
கனடாவின் நோர்த் யோர்க் பகுதி துப்பாக்கி சூடு சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு
09/29/2019கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் சந்தேக நபர் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாதுர்ஸ்ட் வீதிக்கு தெற்கே, சன்னிகிறிஸ்ட் வீதி மற்றும் ரொக்போர்ட் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.