கனடா செய்திகள்
கனடாவில் வாகனம் மோதியதில் சிக்கிய பாதசாரிக்கு நேர்ந்த கதி
10/02/2019கனடாவின் மிசிசாகா பகுதியில், வாகனம் மோதியதில் ஆண் பாதசாரி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் , நேற்று இரவு 8:20 மணிக்கு முன்பு எக்லிண்டன் அவென்யூ வெஸ்டின் வடக்கே ஸ்கொல்லார்ட் கோர்ட் மற்றும் ஹீதர்லீ அவென்யூ பகுதியில் நடந்ததுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விபத்தில் காயமடைந்த நபரை ஆபத்தான நிலையில் மருத்துவ மணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பீல் துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணைக்காகா சாலைகள் மூடப்பட்டன.