New year offer 2017

கனடா செய்திகள்

நீதிமன்றத்திலே திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நீதிபதி

10/05/2019

தீர்ப்புகளில் தனது மேலதிகாரிகள் தலையிடுவதாக குற்றம் சாட்டிய தாய்லாந்து நீதிபதி, நீதிமன்றத்திலே திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தாய்லாந்தை சேர்ந்த நீதிபதி கானகோர்ன் பியாஞ்சனா தெற்கு மாகாணமான யாலாவில் உள்ள நீதிமன்றத்தில், ஐந்து குற்றவாளிகளை விடுவித்த பின்னர், அவர்களில் மூன்று பேரை மரண தண்டனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என கூறிவிட்டு துப்பாக்கியால் தன்னுடைய நெஞ்சுப்பகுதியில் சுட்டுள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்டு மருத்வமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் அவர் சமூகவலைத்தளத்தில் 25 பக்க மெமோ மற்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய மேலதிகாரிகள் குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பினை மாற்றுமாறு வற்புறுத்துவதாகவும், நாட்டில் நீதித்துறை சுதந்திரம் மற்றும் நேர்மை குறித்த கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரது நடவடிக்கை தனிப்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது என நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தாய்லாந்தின் நீதிமன்ற அமைப்பு பல ஆண்டுகளாக இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.