கனடா செய்திகள்
கனடா கார் விபத்தில் ஆசியப் இளம் பெண் உள்ளிட்ட மூவருக்கு நடந்த சோகம்
10/07/2019இந்தியாவை சேர்ந்த இளம் பெண் உள்ளிட்ட மூவர் கனடாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் ஒன்றாறியோவில் உள்ள கல்லூரியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தன்வீர் சிங், குர்விந்தர் சிங், ஹர்பிரீத் கவுர் ஆகிய மூவரும் படித்து வருகின்றனர்.
20 வயது உள்ள மூவரும் காரில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சுவற்றின் மீது மோதியது.
இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியதில் உள்ளிருந்த மூவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.