கனடா செய்திகள்
ஐஎஸ் தீவிரவாதிகள் 800 பேர் தப்பி ஓட்டம்
10/14/2019சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலைத் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 800க்கும் அதிகமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக் கூறப்படுகின்றது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்துப் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது.
இந்த நிலையில் குர்துப் படையினரால் பிடித்து ரக்கா நகருக்கு அருகே உள்ள அய்ன் இஸ்ஸா என்ற இடத்தில் ஏராளமான ஐஎஸ் பயங்கரவாதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக குர்திஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.