கனடா செய்திகள்
கனடாவின் நார்த் யார்க்கில் துப்பாக்கிச் சூடு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்
10/18/2019கனடாவின் வடக்கு யார்க்கில், நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம், இன்று இரவு 7:40 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் டான் மில்ஸ் சாலை பகுதியில் நடந்துள்ளது .
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் ஈடுபட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.