கனடா செய்திகள்
கனேடிய பொது தேர்தல் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
10/21/2019கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்ற வருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன் வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவும் கூறப்படுகிறது.
இதனால், எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற வாய்ப்பில்லாததால், ஜஸ்டின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க நேரிடும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.