கனடா செய்திகள்
வெற்றிப் பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து
10/22/2019கனேடிய பொது தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்
கனடாவில் விறுவிறுப்பாக பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சியான லிபரல் கட்சி முன்னிலை வகிக்கிறது.
இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் பலத்த போட்டி நிலவும் என எதிர் பார்கப்பட்ட நிலையில், ஆளும் கட்சியான லிபரல் முன்னிலை வகிக்கிறது.
லிபரல் கட்சி 150 ஆசனங்களையும் கொன்சவேர்டிவ் கட்சி 117 ஆசனங்களையும் பிளாக் கியூபாகோயிஸ் 35 ஆசனங்களையும் இதுவரையில் பெற்றுள்ளன.
170 ஆசனங்களை பெறும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமகால பிரதமர் ஜஸ்டின் ரூடோ தோல்வி அடையக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் தோல்வி அடைவார் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் அதிக வாக்குகளை ரூடோ பெற்றுள்ளதாக தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன.
லிபரல் கட்சியின் சார்பில் Scarborough-Rouge Park பகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், வெற்றிப் பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.