கனடா செய்திகள்
கனடாவில் ஆசிய பெண் ஊழியர் மீது இனவெறி தாக்குதல்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி
10/31/2019கனடாவில் பல்பொருள் அங்காடிக்கு வந்த பெண் ஒருவர் ஆசியாவை சேர்ந்த பெண் ஊழியரிடம் இனவெறி தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று இணையாத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கனடாவில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், நீ சீன மொழியில் பேசக்கூடாது என கூறி அங்காடிக்கு வரும் பெண்ணொருவர் ஆசிய பெண் ஊழியரிடம் சண்டையிட்டுள்ளார்.
இதோடு இனவெறியை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைகளாலும் ஊழியரை திட்டியுள்ளார்.
இந்நிலையில் சக ஊழியர்கள் சண்டையிட்ட பெண்ணை கடையிலிருந்து வெளியில் செல்லுமாறு அறிவுருத்தியுள்ளனர். இதையடுத்து அவர்களையும் அப்பெண் கோபத்துடன் சரமாறியாக திட்டியுள்ளார்.