கனடா செய்திகள்
நோர்த் யோர்க் பகுதி கொலை சம்பவம்
12/20/2019
கனடாவின் நோர்த் யோர்க் அடுக்குமாடி கட்டடத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இவர்கள் இருவரினதும் ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு 8 மணியளவில் லெஸ்லி வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ ஈஸ்ட் அருகே உள்ளே குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்றுது.
இதன்போது, 22 வயதான ஜெர்மி வின்சென்ட் அர்பினா என்பவர் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில், பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், கொலையாளிகளின் சி.சி.டி.வி காணொளி பதிவுகளை கைப்பற்றி, விசாரணை ஆரம்பித்துள்ளனர்.