கனடா செய்திகள்
சீனாவில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்பும் கனடியர்கள்
02/07/2020சீனாவில் இருந்து 10ஆம் திகதி கனடாவுக்கு திரும்பும் கனடியர்களை முதலில் இராணுவ முகாமில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் இதுவரை கொரோனா தாக்குதலால் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலர் சீனாவில் உள்ள நிலையில் அவர்களை அந்த நாடுகளின் அரசுகள் பத்திரமாக தாய் நாட்டுக்கு திரும்ப உதவி வருகின்றன.
அந்த வகையில் சீனாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க கனடா அரசு , வரும் 10ம் திகதி விமானம் ஒன்றை அனுப்புகிறது.
அந்த விமானத்தில் திரும்பும் நாட்டு மக்களை டிரெண்டன் நகரத்தில் உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக முகாமில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் , வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.