New year offer 2017

கனடா செய்திகள்

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கவலை - சமூக பரவலில் டெல்டா வைரஸ் முன்னிலை

06/10/2021

சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் பரவி வரும் கோவிட் வகைகளில், இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் வைரஸ் முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, சமூகப் பரவல் மூலம் 449 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில், டெல்டா வகை கோவிட் வைரஸ் தாக்கம், 428 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 9 பேருக்கு பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட பீட்டா வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்தது.

இதன்மூலம் சிங்கப்பூரில் டெல்டா வகை வைரசின் தீவிர பரவல் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் முதல்முறையாக டெல்டா வகை வைரஸ் கடந்த மாதத் தொடக்கத்தில் தான் கண்டறியப்பட்டது. தற்போது அதன் பரவல் மிகத் தீவிரமாகவுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மட்டுமன்றி, பிரிட்டனிலும் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.