New year offer 2017

கனடா செய்திகள்

திபெத் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் சீனா

07/22/2021

பீஜிங்: திபெத் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர், தங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர் ஒருவரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என சீனா கட்டாயப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினரின் அறிக்கைப்படி, சீன ராணுவம் மற்றும் உள்ளூர் ராணுவத்தில், திபெத்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த சீனா திட்டமிட்டு உள்ளது. திபெத்திய தன்னாட்சி பகுதியில் நடத்தப்படும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம்களில், திபெத்திய குடும்பத்தில் ஒரு இளைஞர் ராணுவத்தில் சேர வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்களில் படிக்கும் 20 இளைஞர்கள் ராணுவ அகாடமியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் கிராமத்தினர், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியை பற்றி அறிந்தவர்கள், ராணுவத்தின் ரோந்து பணிக்கு உதவும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக உளவுத்துறையினர் கூறி உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.