கனடா செய்திகள்
உணவு, மருந்துகள் பற்றாக்குறை ஏற்படலாம்... இலங்கையிலிருக்கும் தனது நாட்டுக் குடிமக்களை எச்சரித்துள்ள நாடு
01/17/2022தற்போது இலங்கையிலிருக்கும் அல்லது இலங்கைக்குச் செல்லும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது கனடா.
இலங்கையில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என கனடா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.
கனடா அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பயண ஆலோசனையில், மருத்துவம் முதலான சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ஆகவே, போதுமான உணவுப்பொருட்கள், தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு கனடா அரசு இலங்கையிலிருக்கும் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார நிலையில்லாத்தன்மை மற்றும் பயணிகள் மீதான அதன் தாக்கம் காரணமாக, இலங்கைக்கு பயணம் தொடர்பில் இத்தகைய ஆலோசனை வழங்கியுள்ள முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.