கனடா செய்திகள்
பல பேர்களுக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் கொரோனா தடுப்பூசி: கனடாவில் சம்பவம்
01/22/2022ஒன்ராறியோவில் சுகாதார மையம் ஒன்றில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற பல பேர்களுக்கு 6 டோஸ் அளவுக்கு ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒன்ராறியோவின் Schomberg சுகாத மையத்திலேயே குறித்த குளறுபடி நடந்துள்ளது. ஜனவரி 8ம் திகதி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்ற பலருக்கும் 6 டோஸ் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சுகாதார மையத்தில் விசாரித்துள்ளனர். அப்போதே அதன் பின்னணி தெரிய வந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு பைசர் தடுப்பூசி போத்தலும் 0.25மில்லி எனவும், அதனை 6 டோஸ் தடுப்பூசியாக மாற்றிய பின்னரே, பொதுமக்களுக்கு அளிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் சம்பவத்தன்று அவ்வாறு நடக்கவில்லை எனவும், தவறுதலாக ஒவ்வொருவருக்கும் 6 டோஸ் அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட நாள் இரவு தங்களால் தூங்க முடியவில்லை எனவும், உடல் வலி, காய்ச்சல் என சில நாட்கள் நீடித்ததாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
சிலர் தங்களின் குடும்ப மருத்துவரை அணுகி நடந்ததை விளக்கியதில், அடுத்த சில மாதங்களில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்காணிக்கும்படி அவர்களின் மருத்துவரால் அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.