New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 143 பேர் பலி!

02/02/2022

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 30 இலட்சத்து 62 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34 ஆயிரத்து 16 பேர் மரணமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கனடாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 5 ஆயிரத்து 423 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், corona வைரஸ் தொற்றால் 1 ஆயிரத்து 211 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 8 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 28 இலட்சத்து 22 ஆயிரத்து 932 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.