New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவை தொடர்ந்து ஐரோப்பாவிற்கும் பரவிய போராட்டம்!

02/14/2022

கட்டாய COVID-19 தடுப்பூசி மற்றும் பிற பொது சுகாதார நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி, லாரி ஓட்டுநர்கள் கனடா முழுவதும் பல்வேறு இடங்களில் மூன்றாவது வாரமாகவும் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனவரி பிற்பகுதியில் Freedom Convoy போராட்டம் ஒட்டாவாவிற்குள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து முக்கிய எல்லைகள் முற்றுகையிடப்பட்டதுடன், கனடா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்த போராட்டங்கள் கனடா மக்களிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் அனைத்து மட்ட அரசாங்கமும் தயாராகி வருகின்றதாக குறிப்பிட்டார். அட்லாண்டிக் மாகாணத்தின் ஃப்ரெடெரிக்டனில் உள்ள நியூ பிரன்சுவிக் சட்டமன்றத்திற்கு வெளியே அந்தத் தொகுதியைச் சுற்றி வளைத்து வாகனங்கள் ஒலியெழுப்பின.

அதேபோல நோவா ஸ்கோடியாவின், ஹாலிஃபாக்ஸில்லும் போராட்டம் நடந்தது. பிரின்ஸ் எட்வர்ட் தீவில், கார்கள், டிரக்குகள் மற்றும் சில டிராக்டர்கள் சார்லட் டவுன் வழியாக பேரணியாக சென்றன. 500 முதல் 700 வாகனங்கள் பங்கேற்றதாக உள்ளூர் காவல்துறை தலைவர் கூறினார்.

சனிக்கிழமையன்று Prairies இல் பல எல்லைக் கடக்க முடியாத நிலை இருந்தது. எமர்சனை பெம்பினா, N.D. உடன் இணைக்கும் மனிடோபா எல்லைக் கடவை சுமார் 50 டிரக்குகள் மற்றும் பண்ணை வாகனங்கள் கொண்ட தொடரணியால் தடுக்கப்பட்டது, அதே நேரத்தில் வின்னிபெக்கில் உள்ள மாகாண சட்டமன்றத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

இதேபோன்ற போராட்டங்கள் காரணமாக ஆல்பர்ட்டாவில் உள்ள கவுட்ஸ் கிராசிங்கில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோவில், பிரீமியர் டக் ஃபோர்ட் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். வின்ட்சரை டெட்ராய்டுடன் இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரும்படி நீதிமன்றம் வழங்கிய உத்தரவைச் செயல்படுத்த காவல்துறை நடவடிக்கையெடுத்துள்ளது. அதேவேளை கனடவில் தீவிரமடைந்த போராட்டம், சனிக்கிழமையன்று ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் தீவிரம் பெற்றது.

அதன்படி பாரீஸ் நகரில் 7,600 பேர் உட்பட நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் சுமார் 32,000 பேர் கலந்து கொண்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பல தொடரணிகளில் குறைந்தது 500 வாகனங்களுடன் பல வழிகளில் தலைநகருக்குள் நுழைய முயன்றன, ஆனால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது, அவர்கள் எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதன்போது 54 பேரை கைது செய்ததாகவும், 300க்கும் மேற்பட்டவர்களிற்கு குற்றப்பத்திரம் ஒப்படைத்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். அதேசமயம் நெதர்லாந்தில், வாகனப் பேரணி ஹேக் நகருக்கு வந்து, நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலைத் தடுத்தன. டச்சு மொழியில் “அன்பு மற்றும் சுதந்திரம், சர்வாதிகாரம் இல்லை” என்று பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தியபடி, பாதயாத்திரையாக வந்த எதிர்ப்பாளர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவில், கனடாவில் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக, ஓன்ட் மற்றொரு அமெரிக்கக் குழு, இந்த வார இறுதியில் பஃபலோவில் உள்ள அமைதிப் பாலத்தின் அமெரிக்கப் பகுதியில் இரண்டு தனித்தனி வாகனத் தொடரணிகள் ஒன்றுகூடும் என்  கூறியது.

மேலும் நியூசிலாந்தில் இந்த வார தொடக்கத்தில், போராட்டக்காரர்கள் கார்கள் மற்றும் டிரக்குகளின் தொடரணியில் நாடாளுமன்ற மைதானத்திற்குச் சென்று முகாமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.