கனடா செய்திகள்
ரஷ்யா தொடர்பில் கனடா அரசாங்கத்தின் முக்கிய முடிவு!
03/01/2022கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை ஒட்டாவாவில் இரு செய்தியாளர் கூட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை (anti-tank weapon systems) வழங்குவதாக அறிவித்தார்.
இன்று, ரஷ்யாவிலிருந்து அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதிகளையும் தடை செய்வதற்கான எங்கள் நோக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம்,
இது ஜனாதிபதி புடினுக்கும் அவரது தன்னலக்குழுக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் ஒரு தொழில்" என்று ட்ரூடோ பிரெஞ்சு மொழியில் கூறினார்.
இதேவேளை, கனடா 2019 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவிலிருந்து எந்த கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்யவில்லை என்று இயற்கை வள அமைச்சர் ஜொனாதன் வில்கின்சன் திங்களன்று நாடாளுமன்ற அவை உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.