New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் சிக்கல்

03/22/2022

முகக்கவசம் அத்தியவசியமானது அல்ல என கனடா மக்கள் அரசுக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.

கனடாவில் ஒன்றாரியோ வாழ் மக்கள் கொரோனா தொற்று பரவல்களுடன் தொடர்ந்தும் போராடி வரும் நிலையில் முகக்கவசம் அணியும் பிரச்சனை பாரிய பிரச்சனையாக கடந்த சில நாட்களாக நீடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்  அரசு கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக நீக்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிவதை மாத்திரம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முகக்கவசம் அத்தியவசியமானது அல்ல அது எமது உடையின் பிரதான அங்கம் அல்ல என்ற மக்களின் கருத்துக்களின் மத்தியில் அரசு தொடர்ந்தும் முகமூடிகளை அணியுமாறு அறிவித்துள்ளது.

அதேவேளை ஒன்றாரியோவில் தினமும் பதினைந்திற்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை   குறிப்பிடத்தக்கது